நெல்லையில் புகையிலைப் பொருள் வைத்திருந்தவர் கைது

நெல்லை கருப்பந்துறை விலக்கு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பழனிமுருகன் மற்றும் காவல் துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சின்ன ராமலிங்கம் (32) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 1290 கிராம் எடையுடைய புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி