நெல்லை பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அருள்செல்வம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது ஷேக் முகமது என்பவர் லாட்டரி விற்றது தெரிய வந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.