நெல்லை திசையன்விளை அருகே கோட்டை கருங்குளம் பகுதியில் சாலையோரம் கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்து 6 டன் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், லாரி மற்றும் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்த போலீசார், தப்பியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.