நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் புவி ஆய்வு மையம் அருகே நேற்று (அக்.,4) மாலை டைல்ஸ் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று விபத்தில் சிக்கியது. லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் முத்துராஜ், அவரது உதவியாளர் லேசான காயத்துடன் தப்பினர். விபத்து குறித்து சிவந்திப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.