சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டியில், நடிகர் விஜய் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராகப் போராடுவது வெறும் கண்துடைப்பு என விமர்சித்துள்ளார். அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்துப் போராடுபவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளதால் இருவரும் இணைவார்கள் என்றும் மறைமுகமாகத் தெரிவித்தார்.