நெல்லை: நயினார் வீடு முன்பு நடந்த சம்பவம்; போலீஸ் பரபரப்பு தகவல்

கடந்த 12 ஆம் தேதி நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இருவர் பைக்கில் வீட்டை நோட்டமிட்டதாகவும் தகவல் பரவியது. இது குறித்து மாநகர காவல்துறை நேற்று அறிவித்ததாவது, அன்றிரவு பைக்கில் வந்தது தனியார் உணவு நிறுவன ஊழியர் சிவகுமார் மற்றும் அவரது நண்பர்கள். ஒரு வாடிக்கையாளருக்கு உணவு வழங்க வந்தபோது முகவரி தெரியாததால், அங்கிருந்த பெயர் பலகையை உற்றுப் பார்த்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி