நெல்லை: அதிகாரிகளை கண்டுபிடித்தால் அல்வா; நூதன போஸ்டரால் பரபரப்பு

மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை அடைப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகளை கண்டித்து சமூக ஆர்வலர் நெல்லை சிராஜ் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக நெல்லை முழுவதும் அவர் ஒட்டிய போஸ்டரில், அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய மாநகராட்சி அதிகாரிகளை எங்கு பார்த்தாலும் தகவல் தருபவருக்கு 5 கிலோ இருட்டுக்கடை அல்வா பாக்கெட் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி