மேலப்பாளையத்தில் நசீம் உசைன் என்பவர் தனது மனைவி அஸ்மாவுக்கு வீட்டில் பிரசவம் பார்த்தபோது ஆண் குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. அதிர்ச்சியடைந்த நசீம், இரவோடு இரவாக குழந்தையின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார், நசீமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.