நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு கிடைத்த தகவலின் பேரில், வருமானவரித்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படையுடன் இணைந்து இன்று (ஏப்ரல் 8) அப்பார்ட்மெண்டில் சோதனை நடத்தினர். பணம் எங்குள்ளது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அப்பார்ட்மெண்ட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.