நெல்லை மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஆம்பூர் பகுதியில் நேற்று பகல் முழுவதும் மழை ஓய்ந்திருந்த நிலையில், மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ஆம்பூர் டூ பொட்டல் புதூர் சாலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். குடும்பத்துடன் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மரத்தடியில் ஒதுங்கினர். சிலர் குடை பிடித்தபடி சிரமத்துடன் பயணத்தை தொடர்ந்தனர்.