மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவித்த பாளை சமாதானபுரத்தைச் சேர்ந்த கெளதம் சரவணன் (21) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின் பேரில், சரவணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.