தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வரும் 6ஆம் தேதி வாய்ஸ் ஆப் தென்காசி அமைப்பு நடத்தும் போதை விழிப்புணர்வு பேரணியில் ஆளுநர் ஆர்என் ரவி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் தருவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்திற்கு தமிழக கவர்னர் ஆர்என் ரவி வருகை தர உள்ளார்.