இலவசங்கள் குறித்து விவசாயி வேதனை

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், நேரத்தை காரணம் காட்டி மனு வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விவசாயி விஜயராஜன் என்பவர் வேதனையுடன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அவர், "இலவசங்களை வாங்கி வாங்கி மக்கள் அடிமை நிலைக்கு சென்று விட்டார்கள்" என்றும், "இலவசங்களை வாங்காதீர்கள்" என்றும் வீடியோவில் பேசியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி