நெல்லை: வைகோவிடம் ரூ. 1.82 கோடி நிதி வாரி வழங்கிய நிர்வாகிகள்

நெல்லை மண்டல மதிமுக தேர்தல் நிதி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்வு இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவரிடம் நிர்வாகிகள் மொத்தம் 1 கோடியே 82 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கினர். இந்த நிதி திரட்டும் நிகழ்வு துணை பொது செயலாளர் தி. மு. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி