நெல்லை மாவட்டத்தில் தினம்தோறும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். அவ்வப்பொழுது மின்சார தடையும் ஏற்படுவதால் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் வெப்பத்தின் அளவு 102. 6 டிகிரி செல்சியஸ் அளவு பதிவு செய்துள்ளது. தினம்தோறும் சதத்தை தாண்டி வெயிலின் அளவு பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.