முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஜேம்ஸ் (30) என்பவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவேற்றியதாகவும், அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்தது. இந்த வீடியோக்களை பார்த்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் இன்று 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து ஜேம்ஸை கைது செய்தனர்.