நெல்லையில் கடந்த 2024 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பூம்பூம் சேவியர் (57) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சேவியருக்கு, போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேற்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமிக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.