டெல்லி சம்பவம் எதிரொலி; நெல்லையில் போலீஸ் அலார்ட்

டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம், ஐஎன்எஸ் கட்டபொம்மன், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி