தச்சநல்லூர் பகுதியில் நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிந்ததால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் செல்ல அச்சமடைந்தனர். பல இடங்களில் நாய் கடித்து உயிரிழப்புகள் ஏற்படும் சூழலில், நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான நாய்களைப் பிடித்துச் சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.