தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்போரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, ஆளுநர் மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படாதது, நெல்லை மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நெல்லை தொகுதி எம்எல்ஏ ஆர்.எஸ்.முருகன் அமைச்சர் பதவியை எதிர்பாரத்த நிலையில், அவரது பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.