திருநெல்வேலி எம்பியாக தேர்வாகி உள்ள ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டம் காட்டத்துறையை சேர்ந்தவர். இவர் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார். இவருக்கு வயது 62 ஆகிறது. நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். கிறிஸ்தவ (சிஎஸ்ஐ) மதத்தை சேர்ந்தவர். மேலும் ராபர்ட் புரூஸ் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். மாணவர் அணி, இளைஞர் அணி முதல் அவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.