நெல்லை: சந்தேகப்பட்டதால் மாமியாரை வெட்டி கொலை செய்தேன் மருமகள் பகீர்

மானூர் அருகே கம்மாளன்குளத்தில், 90 வயது மூதாட்டி வெள்ளையம்மாளை அவரது மருமகள் வசந்தா கொடூரமாக கொலை செய்துள்ளார். போலீசில் வசந்தா அளித்த வாக்குமூலத்தின்படி, வெள்ளையம்மாள் சம்பந்தமில்லாமல் திட்டுவதாகவும், வீட்டுக்கு வர தாமதமானால் சந்தேகப்பட்டு பேசுவதாகவும் கூறியுள்ளார். நேற்று மீண்டும் திட்டியதால் ஆத்திரமடைந்த வசந்தா, அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் வசந்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி