பாளையில் குளத்தை சுத்தப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் மருத்துவர் பாலசுப்ரமணியன் தலைமையில் பாளை பகுதிகளில் உள்ள வி.எம். சத்திரம் மற்றும் பீர்க்கன்குளம் நேற்று (மே 22) சுத்தம் செய்யப்பட்டது. குளக்கரைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த பணியில் சுகாதார ஆய்வாளர் நடராஜன், சங்கரநாராயணன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி