கங்கைகொண்டான் சோதனை சாவடியில் இன்று போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப் மற்றும் கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் சுமார் 40 கிலோ இருந்த கார் ஒன்றை சோதனை செய்தனர். காரில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரஜித் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.