விகே. புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலாஜி, அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் சாலையை சீரமைப்பது தொடர்பாக வனத்துறையின் பொது தகவல் அலுவலரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்தார். இந்நிலையில், பொது தகவல் அலுவலரான துணை இயக்குனர் பாலாஜி, தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறி, அவருக்கு மாநில தகவல் ஆணையம் ரூ. 10,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.