நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறையில் முதல்வர் ஜோசப் விஜய் படம் மாட்டப்படாத நிலையில், தவெகவின் பாளை தொகுதி வேட்பாளர் மரிய ஜான் தலைமையில் நிர்வாகிகள் இன்று மேயரிடம் முறையிட்டனர். முதல்வர் படத்திற்கு பதில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என ஆணையர் மோனிகா ராணாவிடம் வலியுறுத்தியதால் பரபரப்பு நிலவியது.