நெல்லையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்றார். நெல்லை வழியாகச் சென்றபோது, பாளை கேடிசி நகரில் மத்திய மாவட்ட திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்களின் கூட்டத்தைக் கண்ட முதல்வர், வாகனத்தை விட்டு இறங்கி அவர்களுடன் கைகுலுக்கி உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி