தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. நெல்லையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 11.40 மணிக்கு எழும்பூருக்கும், வருகிற 10-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு நெல்லைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும், வருகிற 13-ந்தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கும், 14-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.