நெல்லை: பக்தர்கள் கூட்டத்தில் மோதிய கார்; 2 சிறுவர்கள் பலி

நெல்லை மாவட்டம் கடம்பன்குளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமி தோப்புக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். நேற்று (மே 20) நெல்லை பழவூர் அருகே சாலையில் நடந்து சென்றபோது, பெண் ஓட்டிச் சென்ற கார் வேகமாக பக்தர்கள் கூட்டத்தில் மோதியது. இதில் விஷ்வா (12) மற்றும் வெனிஸ் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி