மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் சுரேஷ் என்பவரின் கடையில் இன்று (பிப்.26) காவல் துறையினர் சோதனை நடத்தினர். விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 42 புகையிலை பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து, சுரேஷை கைது செய்தனர்.