அம்பை: அரசு ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை

மணிமுத்தாறு பேரூராட்சியில் பணியாற்றிய இசக்கிமுத்து என்பவருக்கு சகாய சுந்தர் என்பவர் ரூ. 3 லட்சம் கடனாக கொடுத்தார். இசக்கிமுத்து வழங்கிய வங்கி காசோலை பணமின்றி திரும்பியதால், சகாய சுந்தர் அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று, இந்த வழக்கில் இசக்கிமுத்துவிற்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து அம்பை நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி