நெல்லை மாவட்ட கண்காணிப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்திப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து சந்திப் நந்தூரி ஆய்வு செய்தார். அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.