முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் 35 நாட்கள் தொடராக 100 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் 7431 நபர்கள் பலன் அடைந்துள்ளதாக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் இன்று (ஜூலை 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.