தென்காசி: இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம் சிவகிரியில், போலீசார் தாக்கியதாக கூறி விவசாயி அந்தோணிராஜ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரன் மற்றும் காவலர்கள் கனகராஜ், முத்துகண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், நெல்லை சரக டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய் இன்று உத்தரவின் பேரில், ஆய்வாளர் உள்பட 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி