நெல்லையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் 2ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ம் வகுப்புக்கான தேர்வு 3ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்பில் மொத்தம் 19835 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 74 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 74 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிஇஓ சிவக்குமார் இன்று அறிவித்துள்ளார்.