திசையன்விளை: இளம்பெண்ணின் வீட்டில் அத்துமீறிய இளைஞர்கள்

திசையன்விளை அருகே, கணவனை இழந்த 33 வயது பெண் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ரஞ்சித் (19), ராஜேஷ்குமார் (29) ஆகியோர் அப்பெண்ணின் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைய முயன்றனர். பெண்ணின் சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி