நெல்லை: சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்? எஸ்பி பேட்டி

தச்சநல்லூர் அருகே புறக்காவல் நிலையம் மீது சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எஸ்.பி. பிரசன்ன குமார் நேற்று (மே 19) செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், "3 சிறுவர்களும் நேற்று பைக்கில் சென்ற போது போலீசார் அவர்களை விசாரித்தனர். அதை மனதில் வைத்து பெட்ரோல் குண்டு வீசினர். மற்றபடி சாட் ஜிபிடி பார்த்து அவர்கள் குண்டு தயாரிக்கவில்லை. இவர்கள் பின்னணியில் வேறு யாரும் இல்லை" என்றார். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி