வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதன் முக்கிய தினங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 2 வரை வீடுகள்தோறும் கணக்கெடுப்பு நடைபெறும். டிசம்பர் 9 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்கள் பெறப்படும். இறுதியாக, பிப்ரவரி 7 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.