நெல்லை பொருநை புத்தகத் திருவிழா வரும் 12ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை டவுன் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு ஓவியம் வரைந்து விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு ஓவியங்களை வரைந்து புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.