உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பேட்டை காமராஜர்நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார். இதில் நெல்லை மக்கள் நல நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.