நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜய், இது 50 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அதிசய தேர்தல் என கூறினார். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவரை எதிர்பார்க்கும் மக்களுக்காக அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். மேலும், தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைவரும் நன்றாக இருப்பார்கள் என விஜய் கூறினார்.