நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்வி சார்ந்த நிலைக்குழு கூட்டத்தில், வருகைப் பதிவு 60 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்கள் அடுத்தடுத்து ஆண்டுகளில் தொடர்ந்து படித்து, விடுபட்ட பருவத் தேர்வுகளை எழுதலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய நடைமுறைக்கு உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், புதிய பாடத்திட்டங்கள் உள்ளிட்ட தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.