நெல்லை: இறந்த தாயை சைக்கிளில் கொண்டு சென்ற மகன்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் சிவகாமியம்மாள(65). நோயாளியான இவரை அவரது மகன் பாலன்(35) கவனித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். சில நாட்களுக்கு முன்பு சிவகாமி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் நேற்று(ஜன 24) சிவகாமியம்மாள் உடல்நிலை மோசமான நிலையில் யாருக்கும் தெரியாமல் வெளியே அழைத்து வந்தவர் டீ வாங்கி கொடுத்ததாகவும், பின்னர் சிவகாமி இறந்து போகவே சைக்கிளில் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி