நெல்லை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்; மின்தடை அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (அக்.,7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9: 00 மணி முதல் 2 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர் , செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணி மூர்த்தீஸ்வரம், மற்றும் இருதய நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

தாழையூத்து உப மின் நிலையத்தில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜ வல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி