திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தாமிரபரணி நதிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இன்று (ஜூன் 15) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கரையோரங்களில் குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.