நெல்லை: சுத்தம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 27வது வார்டுக்கு உட்பட்ட வஉசி தெருவில் உள்ள திருவள்ளுவர் சிலை இன்று (டிசம்பர் 31) சுத்தம் செய்யப்பட்டு சுண்ணாம்பு பொடி போடப்பட்டது. இந்த சுத்தம் செய்யும் பணிக்கான ஏற்பாட்டை 27வது வார்டு கவுன்சிலர் உலகநாதன் செய்திருந்தார். திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி