நாங்குநேரி அருகே சாலை வழியாக சென்றவர்களை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்த 7 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மாற்றுத்திறனாளி ஜான் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.