நெல்லை: பட்ஜெட் தாக்கல் செய்ய சைக்கிளில் வந்த மேயர்

நெல்லை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன் பட்ஜெட் தாக்கல் செய்தார். கூட்டத்திற்கு மேயர் ராமகிருஷ்ணன் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாநகராட்சி அலுவலகம் வருகை தந்தார். இந்த நிகழ்வை மக்கள் வியப்புடன் பார்த்தனர். இக்கூட்டத்தில் துணை மேயர் ராஜு, ஆணையர் மோனிகா ராணா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி