தச்சநல்லூர் ரவுண்டானா பகுதியில் தங்கமாரி(46) என்பவர் நடத்திவரும் பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் மணி கார்த்திக் என்பவர் வேலைக்கு மது அருந்தி வந்து, கணக்கை சரியாக ஒப்படைக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட தங்கமாரியை சாதியின் பெயரைச் சொல்லி திட்டி, செருப்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தங்கமாரி அளித்த புகாரின் பேரில், போலீஸார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.