நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஓட்டலில் நேற்று (ஜூலை 31) தீடிரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காணப்பட்டது. அந்த பகுதி வழியாக செல்பவர்களுக்கு மூச்சுதிணறலும், அசாதாரண சூழ்நிலையும் ஏற்பட்டது. தீயணைப்பு துறைக்கு இது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.